பழிக்குபழியாக அமரர்ஊர்தி வாகனங்கள் எரிப்பு: 3பேர் கைது

பழிக்குபழியாக ரவுடியின், அமரர் ஊர்தி வாகனங்களை, எரித்த மூன்று பேரை, பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-28 13:15 GMT

பழிக்குபழியாக ரவுடியின், அமரர் ஊர்தி வாகனங்களை, எரித்த மூன்று பேரை, பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர், சூர்யா(27),  இவர் பி.பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி, இவர், தனது இரண்டு அமரர் ஊர்தி வாகனங்களை, பீர்க்கன்காரணை, கலைஞர் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைத்திருந்தார். அவற்றை, அடையாளம் தெரியாத, மூன்று நபர்கள், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதையடுத்து, சூர்யா அளித்த புகாரின்படி, பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை செய்தனர். வாகனங்கள் எரிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் இருந்த, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மேலக்கோட்டையூர், ராஜீவ்காந்தி நகர், 3வது தெருவைச் சேர்ந்த, தாமோதரன், நெடுங்குன்றம், வரப்பிரசாத் நகர், கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, சபரிநாதன்(24), முருகப்பெருமாள்(25), ஆகியோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், சூர்யா சில தினங்களுக்கு முன், தாமோதரனிடம் பிரச்னை செய்து, அவரது, கோழி கூண்டை எரித்துள்ளார். சிறிய கூரை வீடு அளவிற்கு இருந்த, கோழி கூண்டை எரித்த, ஆத்திரத்தால் பழிக்கு பழிக்கு வாங்கும் விதத்தில் சூர்யாவின், அமரர் ஊர்தி வாகனங்களை எரித்ததாக, மூன்று பேரும் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Tags:    

Similar News