தடை உத்தரவை மீறி பிக்பாஸ் சூட்டிங் - 6 பேருக்கு கொரோனா தொற்று.

எங்களுக்கு மட்டும் தான் உங்கள் சட்டதிட்டங்கள் பொருந்துமா? திரைத்துறைக்கு கிடையாதா? சமானியன் கேள்வி.;

Update: 2021-05-19 14:19 GMT
மலையாள பிக் பாஸ் - மோகன்லால்.

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி -சூட்டிங்கில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது..இப்ப நம்ம சொல்லப்போற சங்கதி அது இல்ல.

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழக தடை உத்தரவை மீறி பிக்பாஸ் சூட்டிங்---------------அரசின் தடை உத்தரவை மீறி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

கடந்த வாரம் சூட்டிங்கில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து சூட்டிங் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஈவிபி பிலிம் சிட்டியில் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூட்டிங் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதப்பத்தி இன்னா மேட்டர் சாரே அப்படின்னு சென்னை காவல் அதிகாரிகிட்டயும், சுகாதரத்துறை கிட்டயும் கேட்டாக்க... அவுக அதிரடியா  ஆரம்பிச்சு பதிலும் கொடுத்துட்டாய்ங்க..

அரசின் தடையை மீறி சூட்டிங்---தாசில்தார், போலீஸ் அதிரடி--------சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில்.சூட்டிங் நிறுத்தப்படவில்லை. இது குறித்து  தகவல் கிடைத்ததும், பூந்தமல்லி தாசில்தார், உதவி கமிஷனர் சுதர்சனம் ஆகியோர் பிலிம் சிட்டிக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் அப்படின்னு பதில் வந்துச்சி. அப்ப சரி நாரதர் கலகம் நன்மையில தான் முடிஞ்சிருக்கு அப்படின்னு நெனெச்சுகிட்டோம்..

Tags:    

Similar News