திருடப்பட்ட 70 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

சென்னை பல்வேறு பகுதியில் திருடப்பட்ட 70 செல்போன்களை காவல்துறையினர் மீட்டு உரிமையாளர்களும் ஒப்படைத்தனர்

Update: 2023-02-26 09:15 GMT

சென்னை பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு போன 70- செல்போன்களை பள்ளிக்கரணை மாவட்ட காவல் துணை ஆணையர் ஜோஷ் தங்கையா மற்றும் சேலையூர் உதவி ஆணையர் முருகேசன் ராமசாமி ஆகியோர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் காணவில்லை என புகார்கள் வந்த நிலையில் உதவி ஆணையர் முருகேசன் ராமாசாமி தலைமையில் பள்ளிக்கணி குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பம் மற்றும் காவல்துறையினர் சைபர் க்ரைம் உதவியுடன் 70- செல்போன்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.

சென்னை சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஐஸ் ஹவுஸ், புதுப்பேட்டை, மவுண்ட் ரோடு கூடுவாஞ்சேரி மற்றும் வடமாநில பகுதிகளிலும் இருந்து காணாமல் போன 70 செல்போன்களை பயன்படுத்தியவர்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

மேலும் செல்போன் காணவில்லை என புகார் அளித்த அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 70 செல்போன்களை பள்ளிக்கரணை காவல் மாவட்ட துணை ஆணையர் ஜோஷ் தங்கையா அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

காணாமல் போன செல்போன்களை விரைந்து மீட்டுக் கொடுத்த பள்ளிகரணை காவல்துறைக்கு பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

Similar News