ஓட்டுநர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 15 ஆண்டுக்கு பின் கைது
நீலாங்கரையில் கார் ஓட்டுநர் கொலை வழக்கில் 15 ஆண்டுகள் கழித்து தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது செய்யப்பட்டார்.;
சென்னை நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவரை கடந்த 2001ம் ஆண்டு கும்பல் ஒன்று கொலை செய்துவிட்டு தப்பியோடியது. அந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு முதல், 2021 வரை சுமார் 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகமல் ராஜி (எ) உருளை ராஜி என்பவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இவரை பிடிக்க தலைமை காவலர் பிரதீப் தலைமையில், முதல் நிலை காவலர் இன்பராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவாக இருந்த குற்றவாளியை 15 ஆண்டுகளுக்கு பிறகு, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.