செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையை திறக்கக் கோரி பொதுமக்கள் ஆர்பாட்டம்
செம்மஞ்சேரி அரசு மருத்துவமனையை திறக்கக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரொனா ஊரடங்கு காராணமாக, செவிலியர்கள் மருத்துவர்கள் இல்லாமலும் மருத்துவமனை முழுமையாக மூடப்பட்டு உள்ளன.
அவசர நிலையில் பொதுமக்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
செம்மஞ்சேரி பகுதியில் நேற்று நள்ளிரவில் வடமாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 4 பேர் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் செம்மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவமனை மூடப்பட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனை கண்டித்து இன்று அதிகாலை 200க்கும் மேற்பட்டோர் செம்மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு முன்பு மருத்துவமனை 24 மணி நேரமும் திறக்க கோரியும் எப்பொழுதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருக்க வேண்டும் என கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்தை அடுத்து ஒரு மணி நேரத்துக்குப்பிறகு மக்கள் களைந்து சென்றனர்.