செம்மஞ்சேரியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞர் 3 பேர் கைது
செம்மஞ்சேரியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இதுதொடர்பாக, வடமாநில இளைஞர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
செம்மஞ்சேரியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, பொன்னியம்மன் கோயில் அருகே வீடு எடுத்து தங்கி வந்தவர்களை, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்தனர். இதன் அடிப்படையில், திரிபுரா மாநில இளைஞர்கள் மாமான்மியா(22), ஜாஹிர் உசேன்(21), சுமன் அஃத்தார்(20), ஆகியோரை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்தனர். வடமாநில இளைஞர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
விசாரணையில், திரிபுராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. கைதான மமன் மியாவும், ஜாஹீரும் வேளச்சேரியில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நபரின் டீக்கடையில், வேலை செய்து வந்துள்ளனர். சுமன், மேடவாக்கத்தில் தச்சு கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.