மாமல்லபுரம் அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் சாவு :போலீசார் விசாரணை
மாமல்லபுரம் அருகே கடலில் மீன்பிடிக்கச்சென்ற சிறுவன் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே மீன் பிடிக்கச் சென்ற சிறுவன், அலையில் படகு சிக்கி கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.
சென்னை காசிமேடு மீனவர் குப்பம் பகுதியைச் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மீன் பிடிக்கும் தொழிலை செய்துவருகிறார். இவரது மகன் முக்கேஷ் வயது 14 கொரொனா ஊரடங்கு காரணமாக முக்கேஷ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிகுப்பத்தில் உள்ள மீனவர் குப்பத்தில் தனது பாட்டி வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை மீனவ குப்பத்தில் உள்ள மீனவர்கள் 4பேர் கடலில் மீன் பிடிக்க பைபர் படகில் சென்றுள்ளனர்,
இவர்களுடன் முக்கேஷ் சென்றுள்ளார். அப்போது நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென வந்த அலையில் சிக்கி, படகு கவிழ்ந்துள்ளது,
இதில் படகு கவிழ்ந்த சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி முக்கேஷ் உயிரிழந்துள்ளார். படகிலிருந்த 4 மீனவர்களும் சிறு காயங்காளுடன் கடலில் நீந்தியபடி இருந்துள்ளனர்.
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற படகு மீனவர்கள், 4 பேரையும் காப்பாற்றி கரைக்கு அழைத்துவந்தனர்.. மேலும் உயிரிழந்த சிறுவன் முக்கெஷின் உடலையும் மீட்டு வந்தனர். இது குறித்து மாமல்லபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண் வருகின்றனர்.