சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்திய 2 பேர் கைது

சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த பயணிகள் 2 பேரை சுங்கத்துறை அகதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-12-20 17:46 GMT

சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம்.

இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் தன்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறி,கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றாா்.

அவரை சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது தங்க பசை உடைய ஒரு பொட்டலத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.அதில் ரூ.11.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான 266 கிராம் தங்கப்பசை இருந்தது தெரிய வந்தது.

இதைப்போல் துபாயிலிருந்து வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணியை சோதனையிட்டதில் ரூ.18.88 லட்சம் மதிப்புடைய 428 கிராம் தங்கப்பசை,தங்க செயின் மற்றும் ரூ.4.78 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்தனா்.அதோடு பயணியையும் சுங்கத்துறையினா் கைது செய்தனா்.

சென்னை சா்வதேச விமானநிலையத்தில் இலங்கை,துபாயிலிருந்து அடுத்தடுத்து வந்த 2 விமானங்களில் வந்த 2 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து,அவா்களிடமிருந்து ரூ.35.39 லட்சம் மதிப்புடைய 694 கிராம் தங்கம்,மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனா்.

Tags:    

Similar News