தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டு அதிமுக வேட்பாளர் குரோம்பேட்டைகண்ணாம்பாள் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 22வது வார்டில் வட்ட அதிமுக வேட்பாளரும் முன்னாள் நகரமன்ற துணைத் தலைவருமான ஜெய்பிரகாஷ் போட்டியிடுகிறார்.
குரோம்பேட்டை கண்ணம்பாள் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்..
வாக்கு சேகரிப்பின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், பல்லாவரம் அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் பொதுமக்களை இரட்டை இலை சின்னதிற்கு வாக்களிக்குமாறு கேட்டுகொண்டனர்.