பல்லாவரம் ஜவுளி கடையில் துணி வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டிய நபர்கள்
சென்னை பல்லாவரம் ஜவுளி கடையில் துணி வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
ஜவுளி கடையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகள்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நல்லதம்பி சாலையில் அப்துல் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் நான்கு பேர் வந்து 4000 ரூபாய் மதிப்பிலான துணிகளை எடுத்துக் கொண்டு பணம் தராமல் சென்றுள்ளனர். அவர்களிடம் கடையில் இருந்த ஊழியர்கள் பணம் கேட்ட போது ஜெயிலுக்கு போய்ட்டு இப்பதான் வந்து இருக்கிறோம், நான்கு நாட்கள் கழித்து வந்து பணம் தருவதாக கூறியுள்ளனர்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கடையில் இருந்த ஊழியர்களை மர்ம நபர்கள் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து புகாரளிக்கப்பட்டு, சங்கர் நகர் போலீசார் நிகழ்விடத்திற்கு வந்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, மிரட்டிச் சென்ற நான்கு நபர்களையும் தேடி வருகின்றனர்.