இளம் காதல் தம்பதிக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு: பாதுகாப்பு இல்லை என புகார்

அச்சிறுப்பாக்கம் அருகே பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம் ஜோடி, பாதுகாப்பு இல்லை என புலம்புகிறது.

Update: 2021-05-13 08:15 GMT

பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அடுத்த சிறுபேர்பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி. இவரது மூத்த மகன் சந்தோஷ் குமார் (வயது 21). சென்னை பம்மல் அண்ணா நகரை சேர்ந்தவர் இருதய நாதன். இவரது மகள் வேலன்டினா ரோசரி பிரின்ஸ். (வயது 20). இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்துள்ளனர். சந்தோஷ் குமார் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். வெளிநாட்டு வேலையை முடித்துவிட்டு சமீபத்தில் இந்தியா திரும்பினார்.

சந்தோஷ் குமார் அவரது காதலியான வேலன்டினா வீட்டிற்கு சென்று இருவரும் காதலிக்கிறோம். உங்கள் பெண்ணே எனக்கு திருமணம் செய்வீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு வேலன்டினா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சந்தோஷ்குமார் தனது பெற்றோரிடம் வேலன்டினா என்ற பெண்ணை நான் காதலிக்கிறேன் எனக்கூறி உள்ளார். அதற்கு சந்தோஷ்குமாரின் பெற்றோர் முழு சம்மதம் தெரிவித்தனர்.

அதன் பின்னர், வாலண்டினா ரோசரி பிரின்ஸ் தனது வீட்டை விட்டு வெளியேறி, காதலன் சந்தோஷ்குமார் குடும்பத்துடன் சேர்ந்து விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர், பம்மல் ஷங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதுபற்றி, சந்தோஷ்குமார் கூறுகையில், தனது மனைவியின் பெற்றோர் வசதியானவர்கள் என்பதால் எங்களை பிரிக்க எதாவது திட்டங்கள் வகுக்கக்கூடும். எங்களுக்கு வாழ்வதற்கான போதிய பாதுகாப்பில்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News