முறையான மயானப்பாதை வசதி கேட்டு அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை
மதுராந்தகம் அருகே, முறையான மயானப்பாதை அமைத்து தரக்கோரி, அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ராவத்தநல்லூர் கிராமத்தில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிவாழ் கிராம மக்களுக்கு, முறையான மயானப்பாதை வசதி இல்லாததால் இரவு நேரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை, ஏரியில் மார்பளவு தண்ணீரில் சடலத்தை சுமந்து கொண்டு செல்லும் சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் துரித நடவடிக்கை எடுத்து, முறையான மயானப்பாதையை அமைத்து தர வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.