அச்சிறுபாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட மருத்துவமனைக்கு சீல்

அச்சிறுபாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க மதுராந்தகம் கோட்டாட்சியர் உத்தரவு

Update: 2021-05-22 14:07 GMT

அச்சிறுபாக்கத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கத்தில் பிரகாஷ் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அப்பகுதியைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வரும் நோயாளிகளுக்கு காய்ச்சலுக்கு இம்மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். காய்ச்சலோடு வரும் நோயாளிகளுக்கு எந்தவித காய்ச்சல் என்பதன் தன்மையினை முழுவதுமாக ஆராயாமல் தொடர்ந்து காய்ச்சலுக்கான வைத்தியம் செய்து மாத்திரைகளை பரிந்துரை செய்து வந்துள்ளார்.

அச்சிறுபாக்கம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிடைத்த புள்ளிவிபரத்தின் படி, மதுராந்தகம் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா பிரகாஷ் கிளினிக்கை முழு ஆய்வு செய்தார்.

அப்போது தமிழக அரசு அறிவித்துள்ள கொரொனா விதிமுறைகளை மீறி மருத்துவமனை செயல்பட்டு வந்தது ஆய்வில் தெரியவந்தது. ஆய்வுக்குப் பின்னர் மதுராந்தகம் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா சீல்வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மதுராந்தம் வருவாய்த்துறை அலுவலர்கள் மருத்துவமனையை மூடி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News