அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ பனையூர் பாபு உதவி
அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளும் சட்டமன்ற உறுப்பினர்- பனையூர் பாபு.;
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் செய்யும் சட்டமன்றத் தொகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொண்டார் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு
அதைத்தொடர்ந்து இன்று செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பவுஞ்சூர் மற்றும் செய்யூர் அரசு மருத்துவமனகளுக்கு தனது எரம்மாள் அறக்கட்டளையின் சார்பில் தலா 10 ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார். இந்நிகழ்வில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.