மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் கொரோனோ வைரஸ் தடுப்பூசி முகாம்
மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் கொரோனோ வைரஸ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் ஒன்றியம் மின்னல்சித்தாமூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வீரமுத்து தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆயிஷாபீவி முன்னிலை வகித்தார்.
அச்சிறுபாக்கம் வட்டார சுகாதார நிலையம் மற்றும் ஒரத்தி சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய முகாமில் மருத்துவ அலுவலர் செந்தாமரை, 160 நபர்களுக்கு தடுப்பூசியினை செலுத்தினர்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் எம்.எஸ்.தயாநிதி, வட்டார சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்