செங்கல்பட்டு: கொரோனா நிவாரணநிதி மூலம் ஏழைகளுக்கு உணவளிக்கும் குடும்பம்!

செங்கல்பட்டில் தமிழக அரசால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி மூலம் ஏழைகளுக்கு ஒரு குடும்பம் உணவு வழங்கி வருகிறது.

Update: 2021-06-04 12:10 GMT

ஏழைகளுக்கு உணவு வழங்கும் குடும்பத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டினம் ஹாஜியார் நகரில் வசித்து வருபவர் சுதா. இவர் தனது குடும்ப அட்டைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் மற்றும் தனது தந்தை மற்றும் உறவினருக்கு வழங்கப்பட்ட  தொகை ரூபாய் 6 ஆயிரத்தை வைத்துக்கொண்டு கொரோனா ஊரடங்கில் உணவுக்கு வழியின்றி தவித்து வரும் சாலையோரம் வசிக்கும் இயலாதவர்களுக்கு உணவளித்தார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தங்களால் இயன்ற அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர். இதனை வைத்து தினமும் இயலாதவர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கும், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் என 15வது நாளாக தொடர்ந்து 300 பேருக்கு தனது வீட்டிலேயே வைத்து தரமான உணவுகளை  சமைத்து வழங்கி வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் அவர்களது சேவையை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News