செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்காத திரையரங்குகள்; பார்வையாளர்கள் ஏமாற்றம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் திரையரங்குகள் இயங்காது என்ற அறிவிப்பால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Update: 2021-08-23 07:15 GMT

செங்கல்பட்டில் திறக்கப்படாத திரையரங்கு.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் தியேட்டர்கள் 50% பார்வையாளர்களோடு இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனடிப்படையில் இன்று காலை முதல் பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வந்தனர். ஆனால், இன்று திரையரங்குகள் இயங்காது என அறிவித்ததை அடுத்து மக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகையில், கொரொனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தியேட்டர்களை இயக்காமல் இருந்தது தங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. தற்போது தமிழக அரசு 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை இயக்க அனுமதி அளித்கிருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒருபுறம் ஓ.டி.டி.யில் படங்களை ஒளிபரப்பியதன் காரணமாக புதிய படங்கள் இல்லை.

அதன் காரணமாக தியேட்டர்களை இயக்காமல் உள்ளோம். வருகின்ற வெள்ளிக்கிழமையன்று தியேட்டர் உரிமையாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டபின் தியேட்டர்களை இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அதுவரையில் அரசு அறிவித்தபடி கொரொனா நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பு மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News