செங்கல்பட்டு மாவட்டத்தில் 199.7 மி.மீ மழைப்பதிவு

கடந்த 24 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 199.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Update: 2021-09-22 04:30 GMT

கோப்பு படம் 

தமிழகத்தில், வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று இரவு சுமாா் 1.30 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வெளியாகி உள்ளது. அதன்பட், திருப்போரூர்-5.3, மி.மீ, செங்கல்பட்டு-26, மி.மீ, திருக்கழுக்குன்றம்-17.2 மி.மீ, மாமல்லபுரம்-23 மி.மீ, மதுராந்தகம்-24 மி.மீ, செய்யூர்-50, மி.மீ, தாம்பரம்-50, மி.மீ, கேளம்பாக்கம்- 3.8 மி.மீ மழை என மாவட்டத்தில் மொத்தம் 199.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News