மருத்துவர் இல்லாததால் பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழப்பு

வெத்தியார்வெட்டு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மருத்துவர் இல்லாததால் பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழப்பு. பொதுமக்கள் சாலைமறியல்

Update: 2021-09-23 06:07 GMT

சாலைமறியலில் ஈடுபட்ட வெத்தியார்வெட்டு கிராமமக்கள் 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகன் செந்தில் குமார். இவர் மீன்சுருட்டி பெட்ரோல் பங்கில் பம்பு ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வெத்தியார் வெட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டு வெத்தியார்வெட்டு  ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு யாரும் மருத்துவர் இல்லாததால் விழுப்பபள்ளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்த பின்னர் உயிழப்பை தாங்கிகொள்ளாத உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், ஆத்திரமடைந்து வெத்தியார்வெட்டு மருத்துவமனையில் தொடர்ந்து பணியில் மருத்துவர் இருக்க வலியுறுத்தியும், இறந்துபோன செந்தில்குமாரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும், மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை நியமித்து இருபத்தி நான்கு மணி நேரமும் மருத்துவ சேவை செய்ய வலியுறுத்தியும், ஜெயங்கொண்டம்- மீன்சுருட்டி ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கதிரவன் தலைமையிலான மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்- மீன்சுருட்டி ரோட்டில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News