உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல்
த.பழுவூரில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, இனிப்புகளை எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்;
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, உதயநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராமத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், திமுக மாநில இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, 160 மாணவ, மாணவிகளுக்கு இலவச வாட்டர் பாட்டில், நோட்டு, பேனா, பென்சில், இனிப்புகளை எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.கார்த்திக் செய்திருந்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா, பொதுக்குழு உறுப்பினர் ரா.அண்ணாதுரை, பள்ளித் தலைமை ஆசிரியர் சுமதி உட்பட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.