ஜெயங்கொண்டம் அருகே பூட்டிய வீட்டில் திருடிய 2 பேர் கைது

ஜெயங்கொண்டம் அருகே பூட்டிய வீட்டிலிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-02 03:36 GMT

செங்குந்தபுரம் கிராமத்தில் பூட்டிய வீட்டில் நுழைந்து திருடியதற்காக போலிசாரால் கைது செய்யபட்ட நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த கமலஹாசன், மாரிமுத்து.




அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி 4வது தெருவில் உள்ள சக்தி செல்வராஜ் (65) கலாவதி தம்பதியர் மற்றும் 6வது குறுக்குத் தெருவில் உள்ள பவுனம்மாள்(42) தனசேகர் தம்பதியர்கள் வீட்டைபூட்டி விட்டு உறவினர்களை பார்ப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டனர். இந்நிலையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், பூட்டி இருந்த 2 வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவில் வைத்திருந்த நகை, பணம் மற்றும் முக்கிய பத்திரங்களை கொள்ளையடித்து சென்று விட்டதாக இருகுடும்பத்தாரும் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். இருவரும் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால், சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இருவரும் நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த கமலஹாசன், மாரிமுத்து என்பதும் செங்குந்தபுரம் கிராமத்தில் பூட்டிய வீட்டில் நுழைந்து திருடிய 2 பேர் என தெரியவந்தது. மேலும் கமலஹாசன், மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து நகை, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


Tags:    

Similar News