ஜெயங்கொண்டம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலமாக மீட்பு
ஜெயங்கொண்டம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுத்தமல்லி கருங்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்டர். பிணமாக தொங்கியவர் சுத்தமல்லி அருகிலுள்ள நத்த வெளி கிராமத்தை சேர்ந்த சௌந்தரராஜன் (31) என்பது தெரியவந்தது.
குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியில் சுற்றியவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.