தமிழ் புத்தாண்டு சர்ச்சை: மு.க. ஸ்டாலினுக்கு எச். ராஜா கேள்வி
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எச். ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பன்டிட் தீனதயாள உபாத்யாய மாவட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியினை பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தமிழகத்தில் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க, நிவாரணம் அளிக்க, மேலும் இதுபோன்ற வெள்ள பாதிப்புகள் தொடராமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் தி.மு.க. அரசு தோல்வியுற்றது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார். தற்போது அவரது மகன் பார்வையிடுகிறார். வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்காமல் மக்களை திசை திருப்ப, ஹிந்து மதத்தில் அரசு தலையிட்டு வருகிறது.
தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறார்களா? நாடு முழுவதும் சித்திரை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சித்திரை 1 ம் தேதி வெவ்வேறு விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த சித்திரை தமிழ் வருடபிறப்பை, தை மாதமாக மாற்றுவது கண்டிக்கக்கூடியது. ஜனவரி 1 ம் தேதியை கிறிஸ்தவர்கள் புத்தாண்டாக கொண்டாடுவதை மு.க.ஸ்டாலின் தடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.