தா.பழூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் சுற்ற வட்டார பகுதிகளில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி.;

Update: 2021-12-11 12:35 GMT

அரியலூர் பகுதியில் இன்று பெய்த மழை.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் மற்றும் சுற்ற வட்டாரப் பகுதிகளில்,  கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று  காலை முதல்,  வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில்,  திடீரென திரண்ட கருநீல மேகங்களால் மழை துவங்கியது. இதனால், தற்போது நெல் நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை ஏதுவாக இருக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தற்போது பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்  நிலவியது.

Tags:    

Similar News