விக்கிரமங்கலம் அருகே சொத்து கிடைக்காத விரக்தியில் விவசாயி தற்கொலை
பூர்வீக சொத்தில் சேரவேண்டிய சொத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்கவில்லை என்ற மன உளைச்சலால் விவசாயி தற்கொலை;
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள சந்திரபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு பூர்வீக சொத்தில் சேரவேண்டிய சொத்தை குடும்பத்தினர் பாகப்பிரிவினை செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது விவசாய நிலத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதைக் கண்ட அருகிலுள்ள உறவினர்கள் பாக்கியராஜை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பாக்யராஜின் மனைவி பார்வதி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.