அரியலூர்: கொள்ளிட கரையில் 1500 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
கொள்ளிடம் வடவார் கரையில் 1500 மரக்கன்றுகள் நடும் பணியினை, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்.;
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம்,கோடாலிகருப்பூர் ஊராட்சியில்,15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் கட்டும் பணியினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தா.பழூர் ஒன்றியம்,வேம்புகுடி ஊராட்சியில்,கொள்ளிடம் வடவார் கரையில் 1500 மரக்கன்றுகள் நடும் பணியினை, ஊராட்சி மன்ற தலைவர் அய்யனார் இரமேஷ் தலைமையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் மண்டோதரி ராமையன், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.