நடமாடும் ரேசன் கடை: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பொது வினியோக துறையின் மூலம் நடமாடும் ரேசன் கடையினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்

Update: 2022-04-10 06:25 GMT

உட்கோட்டை இருளர் தெருவில், மாவட்ட பொது வினியோக துறையின் மூலம் நடமாடும் ரேசன் கடையினை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ .கண்ணன் துவக்கி வைத்தார் 

ஜெயங்கொண்டம் ஒன்றியம், உட்கோட்டை இருளர் தெருவில், மாவட்ட பொது வினியோக துறையின் மூலம் நடமாடும் ரேசன் கடையினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் அறபலி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர் விவேக், வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், தொ.வே.கூ.சங்க செயலாளர் கண்ணன், கு.ராஜேந்திரன், சங்கர், பூ.கலைவாணன் மற்றும் கழகத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


பின்னர்,  வீரசோழபுரம் ஊராட்சி மெயின்ரோட்டில் கோடை கால தண்ணீர் பந்தல்களை, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமையில், எம்எல்ஏ  திறந்து வைத்தார்.

Tags:    

Similar News