பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க முதல் விற்பனையை எம்எல்ஏ தொடங்கி வைப்பு
Milk Producers Cooperative Society-அணைக்குடம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முதல்விற்பனையை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
Milk Producers Cooperative Society- தா.பழூர் ஒன்றியம், அணைக்குடம் கிராமத்தில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினை துவங்கி வைத்து, முதல் விற்பனையை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சார் பதிவாளர்(பொறுப்பு) கார்த்திகேயன், ஜெயங்கொண்டம் சங்க செயலாளர் தினேஷ், அணைக்குடம் சங்க தலைவர் இரா.சங்கர், செயலாளர் ஆர்.இசைகலை, ஊராட்சி மன்ற தலைவர் தேவிகா இளையராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி சம்பந்தம், கிளை கழக செயலாளர் க.சாமிதுரை மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2