ஜெயங்கொண்டம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமம் மெயின் ரோடு தெருவைச் சார்ந்த பரஞ்சோதி என்பவரின் மனைவி தமயந்தி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு அமர்ந்த கணேஷ் (வயது23) என்ற மகன் உள்ளார். தமயந்தி கடந்த 22 ஆண்டுகளாக மனநிலை பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் தாமாகவே தமது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது தமயந்தி உடல் முழுவதும் எரிந்த நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தமயந்தியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.