அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 52 மது பாட்டில்கள் பறிமுதல்
கோடாலி கருப்பூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது. அவரிடம் இருந்து 52 மது பாட்டில்கள் பறிமுதல்.;
அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது அவரிடம் இருந்து 52 மது பாட்டில்கள் பறிமுதல்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நிக்கோலஸ் தலைமையிலான காவல்துறையினர் கோடாலி கருப்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோடாலி கருப்பூர் மாரியம்மன் கோவில் தெரு ஜெயராமன் மகன் துளசி ராமன் என்பவர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 52 மது பாட்டில்களை பறிமுதல் செய்து. துளசி ராமனை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.