கொரோனா பரவல் காரணமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக ஏப்ரல் 30ம்தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து தமிழக அரசு நேற்று பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து இன்று முதல் ஜெயங்கொண்டத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் ஜெயங்கொண்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளில் ஈடுபடபோவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற வளாகம் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. நீதிமன்ற பணிகளில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.