2 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
ஜெயங்கொண்டம் அருகே 2 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்த கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெண்மான் கொண்டான் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி என்பவரது மகன் ராமு என்கின்ற இளவரசன் வயது (43). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டே முக்கால் வயதேயான சிறுமியை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளார்.
இதில் பயந்து போன சிறுமி மற்றும் சிறுமியுடன் சென்ற அவரது 5 வயது சகோதரரும் பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, ராமு என்கின்ற இளவரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் ராமு என்கின்ற இளவரசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் இருந்து சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.