சிறுமியை கர்ப்பமாக்கியவர்- உடந்தையாக செயல்பட்ட தாய் ஆகியோர் மீது குண்டர்சட்டம்
குழந்தை திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் உடந்தையாக செயல்பட்ட தாய் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
குழந்தை திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியவர் மீதும் உடந்தையாக செயல்பட்ட தாய் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தாய் உதவியுடன் 12 வயது சிறுமியை, கண்டக்டர் குழந்தை திருமணம் செய்து சிறுமிய 5 மாத கர்ப்பமாக உள்ளதாக 181 - க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அரியலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை ராமலிங்கம் மகன் ராதாகிருஷ்ணன் (41) என்பவரை விசாரணை செய்து ராதாகிருஷ்ணன் என்பவரை 11.12.2021 அன்று கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.. ராதாகிருஷ்ணனுக்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாயார் பரமேஸ்வரி (36) என்பவரை திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக செயல்பட்ட பெரிய கருக்கை ராமலிங்கம் மனைவி ருக்மணி (59) என்பவரை காவல்துறையினர் 30.12.2020-அன்று கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்கும் வகையில், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததையடுத்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி மேற்படி ராதாகிருஷ்ணன் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து இதற்கான ஆவணங்களை திருச்சி மத்திய சிறையில் ஒப்படைத்து இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் அடைத்தனர்.