கொரோனா பரவலை தடுக்க கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மூடல்
கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மூடப்படுகிறது.;
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு பவ்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேபோல், வெள்ளி,சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை முதல் நாளை இரவு வரை பக்தர்களுக்கு அனுமதி மறுத்து கங்கைகொண்ட சோழபுரம் பிரதீஸ்வரர் ஆலயம் நேற்று மூடப்பட்டது. இதனால், கோயில் நேற்று வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல், கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் அனைத்தும் நேற்று பக்தர்களுக்கு அனுமதி மறுத்து மூடப்பட்டிருந்தன.