அரியலூர்: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
அரியலூர் மாவட்டம் அம்பாபூர் கிராமத்தில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.;
அரியலூர் மாவட்டம் அம்பாபூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மகுடபதி (26). இவர் திங்கட் கிழமை அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத 26 வயது நிரம்பிய ஒரு பெண்ணிடம் வீட்டில் யாரும் இல்லாத போது பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்தப் பெண் அவரிடமிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதுகுறித்து அந்தப் பெண் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் ஆய்வாளர் ரவிச்சக்கரவர்த்தி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சாமிதுரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மகுடபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.