அரியலூரில் சர்க்கஸ் கலைஞர்களுக்கு நிவாரண தொகுப்பை போலீஸ் டிஜஜி வழங்கினார்
அரியலூர் சர்க்கஸ் கலைஞர்களுக்கு நிவாரண தொகுப்பை திருச்சி மண்டல காவல்துறைத் துணை தலைவர் ஆனிவிஜயா வழங்கினார்.
அரிஜெயங்கொண்டம் நகரத்தில் செந்துறை சாலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக வெளிமாநிலத்தில் இருந்து வந்து சர்க்கஸ் நடத்திய கலைஞர்கள், கெரோனா கால முடக்கத்தால், சர்க்கஸ் நடத்தமுடியாமல் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வந்தனர்.
சுமார் 50கலைஞர்கள் தங்களது இருப்பிடத்திலயே கடந்த ஓராண்டாக சர்க்கஸ் தொழிலை நடத்தமுடியாமலும், வேறு எங்கும் செல்லமுடியாமலும் தவித்து வந்தனர்.இவர்களுக்கு உதவிடும் வகையில் ஜெயங்கொண்டம் கண்ணன் ஜவுளி ஸ்டோர் நிறுவனம் நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்தது.
ஜவுளி ஸ்டோர் சார்பாக அரிசி, கோதுமை, காய்கறிகள், மளிகை சாமான்கள் ஆகிய பொருட்கள் அடங்கி நிவாரண தொகுப்பை திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் ஆனிவிஜயா வழங்கினார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.