நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே நெசவு தொழிலாளி வீட்டு பூட்டை உடைத்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2022-08-02 06:50 GMT

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மூன்றாவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கமலக்கண்ணன். இவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார்.

கமலக்கண்ணனும் அவரது மனைவியும்  கடந்த 29ஆம் தேதி கன்னியாகுமரிக்கு சுற்றுலா  சென்றுள்ளனர். நேற்று இரவு கன்னியாகுமாரியில் இருந்து திரும்பிய கமலக்கண்ணன் வீட்டின் முன் பகுதியில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முன் கதவு பூட்டும் பாறையால் நெம்பி உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 5 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News