முத்தமிழறிஞர் கலைஞர் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்
ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம்.;
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக் கூட்டம், மீன்சுருட்டி கடைவீதியில், ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் சிஆர்எம்.பொய்யாமொழி வரவற்புரையிலும் நடைப்பெற்றது.
இதில் தலைமை கழக பேச்சாளர்கள் வரகூர் காமராஜ், பூ.குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், கழக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் இராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கணேசன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராஜேந்திரன், ராமராஜன், குலோத்துங்கன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.