பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்த 86 ஆயிரம் ரொக்கம் திருட்டு, மர்ம நபர்கள் கைவரிசை

ஜெயங்கொண்டத்தில் பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தில் இருந்த 86 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2021-07-03 16:10 GMT
ஜெயங்கொண்டத்தில் டூவீலரின் டிக்கியில் வைத்திருந்த பணத்தை பட்டப் பகலில் துணிச்சலாக திருடிச் சென்ற மர்ம நபர்கள்.

அரியலூர் மாவட்டம் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் தீபா. இவர் குடும்ப செலவிற்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு வங்கியில் நகையை அடமானம் வைத்துள்ளார்.

அதன் மூலம் கிடைக்க பெற்ற பணம் 86 ஆயிரத்தை ஸ்கூட்டி வாகனத்தின் டிக்கியில் வைத்து கொண்டு ஜவுளி கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பணம் இருந்த பகுதியை உடைக்க முயற்சித்தும் முடியவில்லை. பிரதான கடைவீதி என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால் மற்றொரு நபர் உதவிக்கு வந்துள்ளார்.

மேலும் ஒரு மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வந்தவர், பணம் இருந்த இரு சக்கர வாகனத்தின் அருகே வந்து மறைத்துக் கொண்டர். இதனையடுத்து முதலில் வந்தவர் டிக்கியை உடைத்து அதில் இருந்த 86 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இக்காட்சிகள் ஜவுளிக் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. திருட்டு குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதான கடை வீதியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 86 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News