ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 400 காட்டன் புடவைகள் கொள்ளை

Gold Robbery-ஆண்டிமடம் விளந்தை பகுதியில் ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்பு புடவைகள், 4 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-01 10:56 GMT

திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடு.

Gold Robbery- அரியலூர் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியில் வசித்து வருபவர் தர்மலிங்கம். இவர் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

தர்மலிங்கமும் அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகன்களை பார்க்க கடந்த ஜூலை 30ஆம் தேதி சென்றுள்ளனர். இன்று காலை சென்னையில் இருந்து திரும்பிய தர்மலிங்கம் வீட்டின் முன் பகுதியில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முன் கதவு பூட்டும் பாறையால் நெம்பி உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது, வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தலா 2 ஆயிரம் மதிப்புள்ள 400 காட்டன் புடவைகள் மற்றும் மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் ஆண்டிமடம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News