17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சரக்கு லாரி டிரைவர் கைது
ஜெயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சரக்கு லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
அரியலூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட லாரி டிரைவர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் மணக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் ராதாகிருஷ்ணன் வயது (21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக, ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்து, ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.