சைவமா...? அசைவமா...? எது பெருசுனு சாப்பிட்டு பாத்தாதான தெரியும்...!
Saivam Vs Asaivam Food In Tamil- சைவம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா..? அசைவம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா..? என இத்தொகுப்பில் காணலாம்.;
By - charumathir
Update: 2024-11-29 05:00 GMT
Saivam Vs Asaivam Food In Tamil
Saivam Vs Asaivam Food In Tamil
சைவமா? அசைவமா? - உணவு பற்றிய விரிவான ஆய்வு
சைவமா? அசைவமா? என்பது முக்கியமல்ல நாமும் எப்படி சாப்பிடுவது எது நல்லது கேட்டது என அறிந்து சாப்பிடுவது தான் முக்கியம். ஒரு உணவை இன்றைய காலக்கட்டத்தில் சாப்பிட நன்கு ஆராய்ந்து நம் உடலில் சேத்துக்கலாமா வேண்டாமா யோசிச்சு சாப்பிட வேண்டும்.
சைவம் | Saivam Vs Asaivam Food In Tamil
சைவ உணவு தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. சைவ உணவு இறைச்சி, கடலுணவு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்க்கின்றது. முட்டை பொதுவாக சைவ உணவாக கருதப்படுவதில்லை. விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் சைவம் என கருதப்படும்.
அசைவம்
அசைவ உணவு என்பது விலங்குகளின் இறைச்சியை கொண்ட உணவாகும். அது பெரும்பாலும் வீட்டுவளர்ப்பு விலங்காகவே இருக்கும். கோழிக் கறி, மாட்டுக் கறி, ஆட்டுக் கறி, பன்றிக் கறி மற்றும் மீன் போன்றவை உண்ணுகின்றனர்.
சைவம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Saivam Vs Asaivam Food In Tamil
- பல்வேறு காய்கறிகள், பழங்கள், கீரைகள் மூலம் சத்துக்கள் கிடைக்கும்
- கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவு
- உடல் எடையை கட்டுப்படுத்தும்
- சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தும்
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
அசைவம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- உயர்தர புரதம் மூலம் தசைகள் வளர்ச்சி
- நரம்புகள் மற்றும் தசைகளின் புத்துணர்ச்சி
- ரத்த அணுக்கள் உருவாக்கம்
- மூளையின் செயல்பாடு மேம்படுத்தம்
- தோல் ஆரோக்கியம் மற்றும் கொல்லாஜன்