ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை திறக்க கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.;
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனாவின் தாக்கம் மக்களை மிகவும் பாதித்துள்ளது. தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 360 க்கும் கீழ் இருக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து மதுக்கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது. இச்செயல் கொரோனா தொற்றை மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமையும். மேலும் மக்கள் மீண்டும் பொருளாதார இழப்பிற்கு ஆளாகி மிகவும் துன்பத்திற்கு உள்ளாவார்கள்.
எனவே தமிழக அரசு ஊரடங்கு காலம் முடிந்து தொற்று இல்லாமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.