முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சிகளுடன் எதிர்ப்பு அரசியல் செய்கிறாரா?

தமிழக முதலமைச்சர் எதிர்கட்சிகளுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கிறாரா இல்லையா? அவரது செயல்பாடு எப்படி உள்ளது?

Update: 2022-04-16 09:34 GMT

முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சிகளுடன் எதிர்ப்பு அரசியல் செய்கிறாரா?

'இல்லை' என்பதே உடனடி பதிலாக இருக்க முடியும். முதன்முதலில் அவர் பொறுப்பேற்றதும் மக்களுக்கான திட்டங்களுடன் முதல்வர்  பணியைத் தொடங்கினார். அவரது விரைவான மற்றும் துரித நடவடிக்கைகள் பாராட்டப்படுகிறது. வெளிப்படையாகச் சொல்வதானால், ஸ்டாலின் சொன்ன வார்த்தைகளை நிறைவேற்ற முயற்சிக்கிறார்.

மேலும் மிக முக்கியமாக தமிழகத்தில் கடந்த காலங்களில் நிலவி வந்த வெறுப்பு அரசியலை முற்றிலும் மாற்றுவதில் முனைப்பாக உள்ளார். தமிழக அரசியலில் ஒரு புதிய, நேர்மறையான அரசியல் கலாச்சாரத்தை கொண்டுவர முயற்சிக்கிறார். ஒரு பண்பட்ட அரசியலை நடைமுறைப்படுத்துவதற்கான  உறுதியை அவரது செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் காட்டுகின்றன.

பதவியேற்பு விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் உட்பட அனைவரிடமும் அன்பாகவும் நட்புடனும் பழகினார். கவர்னருடன் சேர்ந்து தேநீர் விருந்தில் அ.தி.மு.கவினருடன் டேபிளைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு மரியாதை அளிப்பவராக நடந்துகொண்டதை நாம் காணமுடிந்தது.

கொரோனா தொற்றுபரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்திற்கான ஆலோசனைக்குழுவில் அ.தி.மு.க ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்தார். இன்னொரு சுவாரசியமான, பாராட்டுக்குரிய விஷயம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் உள்ளது. அவரது அரசியல் எதிரிகள் என்று கூறப்படுபவர்கள் மற்றும் அவரைப் பெயர் சொல்லி அழைத்தவர்களுடனும் அவர் கண்ணியமாகவே பழகி வருகிறார்.

அவருக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கூட தற்போது அவரது செயல்பாட்டால் அவரை பாராட்டும் அளவுக்கு மாறியுள்ளனர்  என்பதே எதிர்ப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டவர், ஸ்டாலின் என்பது தெளிவாகும். ஸ்டாலின் நிச்சயமாக தனது முதிர்ச்சிமிகு அரசியலை வெளிப்படுத்துகிறார். சட்டசபை விவாதங்களிலும் நேரடி பதில் கூறுகிறார். அதில் வெறுப்பு இல்லை. இவற்றை வைத்து பார்க்கும்போது ஒரு ஜனநாயகமான வழியில் ஆட்சியை கொண்டுசெல்வது தெரிகிறது.

Tags:    

Similar News