அறிவாலயத்திலும் பட்டியல் எடுக்கிறார்களாம்..??

ஒவ்வொரு எம்.பி தொகுதியிலும், சட்டமன்றத் தொகுதிவாரியாக தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் பட்டியலை எடுத்திருக்கிறார்கள்.

Update: 2024-06-13 05:33 GMT

திமுக தலைமையகம் (கோப்பு படம்)

சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர் பெற்றுள்ள வாக்குகளின் விபரங்கள் குறித்த பட்டியல் திமுகவிலும் எடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.  13 சட்டமன்றத் தொகுதிகளில், தி.மு.க கூட்டணியைவிட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்களாம்.

அந்தப் பட்டியலில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் அருப்புக்கோட்டை தொகுதியும், அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதியும் இருக்கின்றன. 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில், தற்போது மிகக்குறைவான வாக்குகளைப் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி, ‘அமைச்சர்கள் இருவரும் கோட்டைவிட்டுவிட்டார்களே...’ என்கிற முணுமுணுப்பு அறிவாலயத்தில் கேட்கிறது.”

“அப்படியென்றால் சின்ன லிஸ்ட்தான் என்கிறீர்களா?”

“இல்லை. இவர்களோடு மா.செ-க்களான மதுரை தெற்கு மணிமாறன், ஈரோடு வடக்கு என்.நல்லசிவம், திருப்பூர் வடக்கு செல்வராஜ், நாமக்கல் மேற்கு மதுரா செந்தில் உள்ளிட்டோரின் தேர்தல் வேலைகள் தொடர்பாகவும் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு, முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம்.

இது தவிர உளவுத்துறையும் தனியே ஒரு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறது. இந்த வார இறுதியில் அமைச்சரவையிலும் கட்சியிலும் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தகவல்கள் வரும் சூழலில் என்ன செய்வது எனத் தெரியாமல் கலக்கத்தில் இருக்கிறார்களாம் லிஸ்ட்டில் இருப்பவர்கள். 

Tags:    

Similar News