தினம் ஒரு மாதுளை சாப்பிட்டா உங்க உடம்புக்கு அவ்ளோ நல்லதா...? இது தெரியாம போயிருச்சே...! | Mathulai Benefits in Tamil
Mathulai Benefits in Tamil - மாதுளைப்பழம் வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் ‘கே’ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கின்றன..மாதுளையை தினமும் சாப்பிடுவதால் சருமம் அழகாவும்,பொலிவாகவும் மாறும்.இவற்றின் நன்மைகளை பார்க்கலாம்.
மாதுளை தற்போது பழவகைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.காரணம் ரத்தசோகை ஏற்படுவதால் ரத்தம் ஊரும் பழமாக மாதுளை உள்ளது.இது பார்ப்பதற்கும் அழகாவும் நிறமாகவும் இருக்கும்.சிலர் மாதுளையை தனது வீட்டிலே மரமாக வளர்க்கின்றனர்.எனவே தினமும் அதை சாப்பிட்டால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அவையே நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது.
பழங்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. சில பழங்களில் உள்ள நன்மைகள் அளவிட முடியாதவை. இவ்வாறு அளவிட முடியாத நன்மைகள் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளம் பழத்திற்கு என்று ஒரு தனி இடம் உள்ளது. மாதுளைப் பழத்தில் மூன்று வகையான சுவைகள் இனிப்பு, புளிப்பு ஆகியவை உள்ளன. எனவே இப்பழத்தைப் பெரியோர் முதல் சிறுகுழந்தைகள் வரை அனைவரும் விரும்புகின்றனர்.
மாதுளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் | Mathulai Benefits in Tamil
1.மாதுளைப்பழம் வைட்டமின் ‘ஏ’ மற்றும் வைட்டமின் ‘கே’ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கின்றன.
2.மாதுளையை தினமும் சாப்பிடுவதால் சருமம் அழகாவும்,பொலிவாகவும் மாறும்.
3.சருமத்திலிருந்து ஈரப்பதம் வெளியேறுவதைத் தடுத்து ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இப்பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு இருப்பதால் பாக்டீரியாவின் தொற்றிலிருந்து முழுமையாகச் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
4. சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகளில் மிகவும் பயனளிக்கக்கூடிய வைட்டமின் ‘ஈ’ மாதுளைப் பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இப்பழம் உடலில் உள்ள செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்து இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.
5.மாதுளை ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலம். இதில் வைட்டமின்கள் மற்றும் பைட்டோகெமிக்கல் கலவைகள் உள்ளன. இது இதயத்துக்கு நல்லது. இது கர்ப்பிணிகளுக்கு அதிக நன்மைகளை அளிக்க கூடிய பழம். வைட்டமின்களும், மினரல்களும் தாதுக்களும் அடங்கியுள்ளது.
6.மாதுளைப்பழம் இரும்புச்சத்து குறைபாட்டை தடுத்து இரத்த சோகையை தடுக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைட்டமின் தேவை. இது உண்ணும் உணவுகளிலிருந்து இரும்புச்சத்து உருவாக்க செய்கிறது. கர்ப்பகாலத்தில் இரும்புச்சத்து அவசியம் தேவை.ஆகையால் இதை உண்ணலாம்.
7. கால்சியம் உள்ளடக்கத்தை அதிகரித்து எலும்பு அடர்த்தியை ஊக்குவிக்கிறது. இதன் வழக்கமான நுகர்வு எலும்பு இழப்பை தடுக்கலாம். எலும்பு உருவாக்கத்தை மேம்படுத்தலாம்.
8. கர்ப்பிணி பெண்களுக்கு நஞ்சுக்கொடி பிரச்சனைகள் வரலாம். இதனால் குழந்தைகள் குறைப்பிரசவம் அல்லது குழந்தைகளின் எடை குறைவாக இருக்கலாம். இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் காரணமாக ஏற்படலாம். மாதுளை சாற்றில் உள்ள் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நேர்மறையான விளைவுகளை கொண்டுள்ளன. இந்த பழம் ஆபத்துகளை தடுக்கலாம். நோயெதிர்ப்பு வலுப்படுத்தி தொற்றுநோய்களை எதிர்த்து போராடவும் செய்கிறது.
9. உடலில் நைட்ரிக் ஆக்சைட் என்னும் தனிமம் குறையும்போது, மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. இதைச் சாப்பிட்டால் மனஅழுத்தம் குறையும்.
10. உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
11. மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.
12. மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.
13. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.
14. தினமும் சாப்பிட்டால் மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.
15. வயோதிகத் தன்மையைத் தள்ளிப்போடும் பெரும்பாலான `ஆன்டி ஏஜிங்’ சீரம் மாதுளம்பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது. பழமாகச் சாப்பிடும்போது அதைவிட அதிகப் பலன்கள் கிடைக்கும்.
16. அயல்நாடுகளில், பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.
17. மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்சனைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.
18. திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். Pomegranate benefits in tamil
19. மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும், எலும்புகள் வலுப்பெற உதவும்.
20. தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால் ரத்த அழுத்தம் குறையும்.
21. சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளார்கள்.
22. தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால் ரத்த நாளங்கள் தளர்வடைந்து அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று இதயம் பலம் பெறும்.