corona symptoms in tamil கொரோனா பாதித்தவருக்கான அறிகுறிகள் என்னென்ன? ......
corona symptoms in tamil கொரோனா உலகையே அச்சுறுத்திய கொடிய வைரஸ் தொற்று நோய். இந்நோய் பாதித்தவருக்கான அறிகுறிகள் என்னென்ன என்பதைப்பற்றி பார்ப்போம்.;
corona symptoms in tamil
உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் நோயானது கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில்இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தது. கடந்த 2 வருடங்களாக இதனால் பாதிப்படைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் ஏராளம். இன்றும்இந்தியாவில் பலர் இதனால் பாதிப்படைந்து வருகின்றனர். மற்றவர்கள் இதனால் பயம் அடைந்துள்ளனர்.
திடீரென தாக்குதல் நடத்தி மொத்த உயிர்களையும் கொத்து கொத்தாக அள்ளிச் சென்ற கொடிய வைரஸ் கொரோனா சீன நாட்டில் உருவெடுத்து உலகம் முழுக்க பரவி பலரை அழித்தது. தற்போது பலரை அழிக் கநினைக்கிறது.
ஒன்று மட்டுந்தெரியுமா. தற்போது சீனாவில் மறு பிரவேசம் என்பது போல் மீண்டும் தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது கொரோனா. நாம் இங்கு சுதந்திரமாக நடமாடினாலும் ஒருசிலர் திடீரென நன்றாகவே இருந்து உயிரிழக்கும்போது அவருக்கு கொரோனாவாக இருக்குமோ? என்ற சந்தேகம் இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை. எனவே விழிப்போடு இருங்க... பாதுகாப்பா இருங்க...
கொரோனா வைரஸின் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் என பல வகையான திரிபுகள் உலகின் பல்வேறு நாடுகளில் பரவின.முந்தைய வகை கொரோனா வைரசில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளால் உண்டாகும்போது புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு 'திரிபு' (variant) என்று அழைக்கப்படும். உலகம் முழுவதும் பல்வேறு திரிபுகள் இதுவரை வந்திருக்கின்றன.
புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும்.காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும்.வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.சிலருக்கு தீவிரமான சளி உண்டானதைப் போல அறிகுறிகள் தென்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். .
தலைவலி, தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை எரிச்சல், மற்றும் மூக்கு ஒழுகல் ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும். .கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களில் குறைந்தது 85 சதவீத பேருக்கு மேற்கண்ட மூன்று அறிகுறிகளில் ஒன்று தென்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே அவர்கள் இருப்பது, கொரோனா வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.கொரோனாவானது முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.
கோவிட்-19 அறிகுறிகள் தென்படின், ஒருவரின் உடலில் தொற்று உண்டான நேரத்தில் இருந்து சராசரியாக ஐந்து நாட்கள் ஆகும். எனினும் 14 நாட்கள் வரை கூட ஆகலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.குளிர் - காய்ச்சல்,சளி,குறைவாக மூச்சு வாங்குதல் அல்லது மூச்சு விடுவதில் சிரமம்,உடல் சோர்வு,தசை அல்லது உடல் வலிதலைவலி புதிதாக சுவை அல்லது முகர் திறனை இழத்தல்தொண்டை எரிச்சல் அல்லது தொண்டை கரகரப்புமூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகல்,குமட்டல் அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு,வயிற்றுப்போக்கு.
அறிகுறிகள் ஒரே மாதிரி இருக்குமா?
இல்லை. அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும். இதற்கு காரணம் வெவ்வேறு நபர்களின் உடல்களில் வெவ்வேறு பாகங்களை கொரோனா வைரஸ் தாக்கும் என்பதுதான்.
காய்ச்சல் இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி.
காய்ச்சலுடன் கூடிய இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு.
ஜீரண மண்டலத்தில் அறிகுறிகள்: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு.உடல் சோர்வு (முதல் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு.
குழப்பநிலை (இரண்டாம் நிலை தீவிரத் தன்மை): corena symptoms in tamilதலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, தெளிவாக சிந்திக்க இயலாமல் போகும் மனநிலை.
வயிறு மற்றும் சுவாசக் கோளாறு (அதீத தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம்.
இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்னை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
டெல்டா திரிபின் அறிகுறிகள் என்ன?
டெல்டா திரிபு முதன் முதலாக அக்டோபர் 2020இல் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் உண்டான கொரோனா இரண்டாம் அலைக்கு எளிதில் பரவும் தன்மை உள்ள இந்தத் திரிபும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.தலை சுற்றல், வறண்ட தொண்டை, தொடர் சளி போன்ற அறிகுறிகள் கொரோனா டெல்டா வகை திரிபு பாதிப்பை எதிர்கொள்பவர்களிடம் பொதுவாக காணப்படுகின்றன என்று பிரிட்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு அறிகுறி?
வாந்தி, வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பகுதியில் தசை பிடிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்ததற்கான அறிகுறி என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இருமல் வந்தால் கோவிட்-19 அறிகுறியா?
corona symptoms in tamilபல வைரஸ் தொற்றுகளுக்கும் கோவிட்-19 தொற்று போன்றே அறிகுறிகள் இருக்கும். குறிப்பாக இந்த அறிகுறிகள் குளிர் காலத்தில் பரவலாக இருக்கும்.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள், போதிய ஓய்வு மற்றும் பாராசெட்டமால் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்டாலே குணமாகிவிடுவர்.ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முக்கிய காரணம் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுவதால்தான்.
அறிகுறி தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
corona symptoms in tamilநீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, வீட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.நீங்கள் டாக்டரிடம்சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்
தற்காத்து கொள்வது எப்படி?
உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள்.
டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்னைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.
கொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?
corona symptoms in tamilகொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.