நீங்க வெயிட் குறைக்க முடிலனு கவலையா..? இந்த உணவ வாரத்தில் ஒரு முறை சாப்பிடுங்க.. உங்க கவலைக்கான பதில் இருக்கு..! | Kollu Benefits In Tamil
Kollu Benefits In Tamil - அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது. நம் உடலுக்கு மிகவும் பயனளிக்கிறது.அதை பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.;
''கொழுத்தவனுக்கு கொள்ளு (Kollu benefits in tamil) ; இளைத்தவனுக்கு எள்ளு'' பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு (Kollu) அத்தனை சக்தி உண்டு. அதற்காக இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. ஏராளமான மருத்துவப் பலன்களையும்
உள்ளடக்கியது. இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.
கொள்ளு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ஆயுர்வேத சித்த மருத்துவத்திலும் கொள்ளு(Kollu) பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. இதன் மகத்துவத்தை அறிந்திருந்ததால்தான் நம் முன்னோர்கள் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கு இதை உணவாகக் கொடுத்தனர். குதிரைக்கு இது பிரத்யேக உணவு. அதனால்தான் குதிரை கொழுப்புக் கூடாமல் சிக்கென்ற உடல்வாகோடு இருக்கிறது, அதிவேகமாக ஓடுகிறது இதன் காரணமாகத்தான் இதை `குதிரைக் கொள்ளு (Kollu)’ என்றும் சொல்கிறார்கள்.
கொள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்| Kollu benefits in tamil
1.புரதம் நிறைந்தது | Horse Gram Protein
அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம்(Protein) உதவுகிறது.
2.உடல் எடை குறைக்கும் | Horse Gram Weight Loss in Tamil
சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க(Weight loss) உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.
3.சளி, காய்ச்சல் | Horse Gram Health Benefits
இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால் உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும். சுவாசத் தொந்தரவு நீங்கும், காய்ச்சலையும்(Cold and Fever) குணமாக்கும்.
4.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்| Horse Gram Immunity Booster | Kollu For Weight Loss In Tamil
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ( immunity power ) அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும், நரம்புக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால் பசியின்மை நீங்கும், உடல் வலுவாகும்.
5.சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் | Horse Gram Kidney Stone
இதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறிய அளவிலான சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும். குறிப்பாக கால்சியம் ஆக்சலேட் வகை சிறுநீரகக் கற்களை கரைக்க உதவும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. மேலும் கொள்ளுவையும் இந்துப்பையும் சிறிது எடுத்துக்கொண்டு அவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள், சிறுநீரகப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் சேரும் கற்களைக்(Dissolving Kidney Stones) கரைக்கும்.
6.விந்தணுக்கள் அதிகரிக்கும்| Horse Gram Increase Sperm Count
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து (Increasing Sperm Count) மலட்டுத்தன்மையை நீக்க உதவும்.
7.சர்க்கரைநோய் தடுக்கும் | Horse Gram Diabetes | Kollu For Weight Loss In Tamil
நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடும்(Preventing Diabetes) அளவுகோல் `கிளைசெமிக் இண்டெக்ஸ்' எனப்படும். இந்த அளவீடு அதிகமாகும்போது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். ஆனால், கொள்ளு ஆன்டி- ஹைப்பர்கிளைசெமிக் உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது.
8.மாதவிடாய்ப் பிரச்னைகளைச் சரிசெய்யும் | Can We Eat Horse Gram During Periods
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். மாதவிடாய் பிரச்சனைகளை (Regulating Menstrual Problems) சரிப்படுத்தும். பெண்கள் கொள்ளு நீரை அருந்தலாம், சூப்பாகவும் சாப்பிடலாம். மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்த்தல் நல்லது.