இன்னும் 20 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு என்ன தேவை?
ஜியோபாலிட்டிக்ஸ் எனும் உலக அரசியல் நம்மில் பலரும் நினைப்பதை விட மிக சிக்கலானது.
ஜியோபாலிட்டிக்ஸ் என்பது புவி சார் அரசியல். நம்மில் பலரின் புரிதல்களுக்கு மாறான நிகழ்வுகள் நிழல் உலகில் நடந்துக் கொண்டிருக்கிறது. இன்றைய உலகில் எண்ணிக்கை என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. யாரிடம் தொழில்நுட்பம் மற்றும் ஆளுமை உள்ளது என்பதே மிக முக்கியமாக உள்ளது. இன்றைய இஸ்லாமிய உலகில் ஈரானை தவிர வேறு எந்த இஸ்லாமிய நாடும் அமெரிக்காவுக்கு எதிராக இல்லை. சொல்லப்போனால், அணு ஆயுதம் வைத்திருக்கும் பாகிஸ்தான் உட்பட, அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்க ஆதரவு நாடுகளே. இதற்கு ஈரான் மட்டுமே விதிவிலக்கு.
ஈரானின் பின்னணியில் இயங்கும் ஈராக், லெபனான், சிரியா, யெமனின் ஹௌத்திகள் ஆகியவையே அமெரிக்காவின் பிரிக்க முடியாத நண்பனான இஸ்ரேலின் சவால்.
அமெரிக்க டீப் ஸ்டேட்டில் யூதர்களுக்கும் இருக்கிறார்கள் என்கிறார்கள். ஆகையால் எந்த காரணம் கொண்டும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இஸ்ரேலை அமெரிக்கா விட்டுக் கொடுக்காது. இஸ்லாமிய நாடுகள் இடையே உணர்ச்சி பொங்கல் மட்டுமே உள்ளதே தவிர, யுக்திகளோ, சாதுர்யமோ, மிக முக்கியமாக ஒற்றுமையோ துளியும் இல்லை.
ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டையும் அமெரிக்கா விலக்கவே முடியாத வகையில் தனது வலைப்பின்னலில் வைத்துள்ளதே நிதர்சனமான உண்மை. அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்லாமிய நாட்டுத் தலைவர்கள், சதாம் ஹுசேன் மற்றும் கடாஃபிக்கு நடந்ததை யோசித்து அடங்கி ஒடுங்கி விடுவார்கள்.
பாகிஸ்தானை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு banana republic எனப்படும் வாழைப்பழ ஜனநாயகமே நடக்கிறது. ராணுவம் தான் அங்கு அனைத்து ஆளுமையும். பாகிஸ்தான் என்ன தான் சீனாவுடன் நெருக்கமாக இருந்தாலும், ஒரு துரும்பை கூட பாகிஸ்தானிய ராணுவம் அமெரிக்காவை கேட்காமல் நகர்த்தாது. இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா வைத்திருக்கும் துருப்பு சீட்டில் மிக முக்கியமானது பாகிஸ்தான். தற்போது பங்களாதேஷ். பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவுகளும் அமெரிக்காவால் தீர்மானிக்கப்படுகிறது என்று சொன்னால் இங்கு பலர் நம்பப் போவது இல்லை.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஆகட்டும், அதன் மிக முக்கியமான நடவடிக்கைகள் ஆகட்டும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாறாது. காரணம் அமெரிக்காவை உண்மையில் ஆள்வது அதன் deep state எனப்படும் ஒரு நிழல் குழு. இந்த குழுவில் யார் உள்ளார்கள் என்பது இன்றுவரை யாருக்கும் புலப்படவில்லை. இது கேட்பதற்கு ஏதோ conspiracy theory போல் இருந்தாலும் இதுதான் உண்மை.
அமெரிக்காவின் deep state, உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் தன்னுடைய மிகப்பெரும் நெட்வர்க் மூலம் கண்காணிக்கின்றது. அமெரிக்க சமூக ஊடகங்கள் முதல் அதன் வெகுஜன ஊடகங்கள் வரை big data தொழில் நுட்ப யுக்திகள் பயன்படுத்தப்பட்டு தகவல்கள் அலசப்படுகின்றன. எங்கே என்ன வீக் பாயிண்ட் உள்ளது? எங்கே யாரை பயன்படுத்தலாம் ? எங்கே இன, மொழி, நிற, மத பேதங்கள் உள்ளன ? அவற்றை எப்படி நமக்கு சாதகமாய் பயன்படுத்தலாம் என்பதில் இந்த டீப் ஸ்டேட் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு நாட்டில் உள்நாட்டு குழப்பத்தை எப்படி உருவாக்கலாம்? எப்படி ஊடகங்களை வைத்து பெரிது படுத்தலாம். எப்படி ஏற்கனவே தன்னால் நிறுவப்பட்டுள்ள சமூக முக்கியஸ்தர்கள் அல்லது குழுக்களை வைத்து பிரச்சனைகளை பெரிதுபடுத்தலாம் என்பது இந்த டீப் ஸ்டேட்டுக்கு கை வந்த கலை. உலகம் முழுவதும் இவர்கள் இதை பல முறை பரிசோதித்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
பல லட்சம் கோடிகளை அமெரிக்காவின் டீப் ஸ்டேட், மதமாற்றங்களை மைக்ரோ லெவலில் புரிய வைப்பது உலகளாவிய ஆளுமைக்கு தான். சொல்லப் போனால் ஒரு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கே பின்னணியில் அமெரிக்க டீப் ஸ்டேட் இருக்கிறது என்பது தெரியாது, புரியாது.
மணிப்பூரில் உள்ள கும்கிகள் முதல் தூத்துக்குடியில் நடந்த போராட்டங்கள் வரை பின்னால் மிக உயரத்தில் இருந்து ஆட்டி வைப்பது அமெரிக்காவின் டீப் ஸ்டேட் தான். மிக, மிக கணிக்க முடியாத முக்கிய நபர்கள் கூட அமெரிக்க டீப் ஸ்டேட்டின் வலை பின்னலில் தங்களுக்கே தெரியாமல் இயங்குகிறார்கள்.
அமெரிக்காவின் ஆளுமையில் இல்லாத ஒரே நாடு ரஷ்யா மட்டுமே. வேறு எந்த நாட்டையும் சாராமல் அது அனைத்து வளங்களையும் கொண்டிருக்கிறது. சீனாவோ, மிகப்பெரும் உயரங்களை எட்டிய பின்பும் கூட, அமெரிக்காவின் பொருளாதார sanctions களுக்கு அஞ்சியே இருக்கிறது. சீனப் பெருங்கடல் பிராந்தியத்தை தாண்டி அதன் செல்வாக்கு இல்லை. ஆனால் அது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ரஷ்யாவை ஒடுக்க அமெரிக்கா சீனாவை வளர்த்து விட, அது இப்போது முதலுக்கே மோசமாகி விட்டது.
தற்போது அமெரிக்க டீப் ஸ்டேட், சீனாவை போல் மற்றொரு நாடாக இந்தியா வளர ஒரு போதும் அனுமதித்து விடாது. இந்தியாவில் உள்ள அதன் நிழல் அமைப்புகளை முடுக்கி விட தருணம் பார்த்து காத்திருக்கிறது. மத ரீதியான தூண்டல்கள், விலைவாசி உயர்வு அல்லது வரிச்சுமை எனும் பெயரில் மக்கள் போராட்டம், பல சக்திகளை தூண்டுதல் என ஏதோ ஒரு வகையில் அது பிரச்சனையை உருவாக்க காத்திருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வை நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது தலையாய கடமையாகும்.
இன்னும் இந்தியா அடுத்த இருபது ஆண்டுகளுக்கு எந்த பெரிய போர்களோ, உள்நாட்டு கலவரங்களோ இன்றி இதே வேகத்தில் வளர்ந்தாக வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பத்து பதினைந்து ட்ரில்லியன் டாலர்களை எட்டி விட்டால், அதன் பின் உலகம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கும். அமெரிக்க டீப் ஸ்டேட் சீனாவை போல் இந்தியாவையும் மதிக்கத் தொடங்கும்.