புதிய இந்தியான்னா என்னன்னு தெரியுமா?

அடிக்கு அடி, உதைக்கு உதை, பேச்சுக்கு பேச்சு. நட்புக்கு நட்பு இது தான் புதிய இந்தியா.;

Update: 2024-11-01 05:12 GMT

பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 

இதுவரை ஏமாற்றப்பட்டும், பழிதீர்க்கப்பட்டும், தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகியும் வந்தது தான் பழைய இந்தியா. சுதந்திர இந்தியாவை காங்கிரஸ் மட்டும் 53 வருடங்கள் ஆண்டிருந்தாலும், சோனியா வழிகாட்டலில் மன்மோகன் ஆண்ட அந்த 10 வருடங்களில் மட்டும் பாகிஸ்தான் உதவியுடன் இந்தியாவின் மீது பல கொடுரமான தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அதாவது, 10 ஆண்டுகளில் 52 தீவிரவாதத் தாக்குதல்கள். அதில் சில முக்கியமானவற்றை மட்டும் பார்ப்போம் -

29.10.2005-டெல்லி- பலி 70-காயம் - 250 -

07.03.2006- வாரணாசி - பலி- 28 - காயம் - 101-

11.07.2006-மும்பை டிரெயின் - பலி- 209 - காயம் - 715_

08.09.2006- மாலேகான்- பலி- 40- காயம் - 125-

18.02.2007- சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் - பலி- 70- காயம் - 50-

25.08.2007- ஹைதராபாத்- பலி- 47 - காயம் - 54

13.05.2007- ஜெய்பூர் - பலி- 71 - காயம் - 200-

26.07.2008- அகமதாபாத் - பலி- 56 - காயம் - 200-

27.09.2008- டெல்லி - பலி- 33 - காயம் - 130 -

30.08.2008- அசாம்- பலி- 81 - காயம் - 470 -

26.09.2008- மும்பை தொடர் தாக்குதல் - பலி- 171- காயம் - 239-

ஆம், மன்மோகன்சிங் ஆட்சி நடத்திய வெறும் 10ஆண்டுகளில் நடந்த முக்கியமான தாக்குதல்கள் இவை. தாக்குதல்கள் இருக்கட்டும். ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கு அப்போதைய பழைய இந்தியா கொடுத்த பதிலடிகள் என்ன?

இவ்வளவு தாக்குதல்கள் பாகிஸ்தான் மண்ணில் இருந்து ஏவப்பட்ட தீவிரவாதிகள் மூலம் நடந்தும் மன்மோகன் சிறிதளவு கூட ஆவேசப்படவில்லை. கோவப்படவில்லை. இப்படி ஒரு அமைதியான பிரதமரை எந்த நாடும் கண்டிருக்காது. ஆம் மேற்கண்ட தாக்குதல்கள் மட்டுமல்ல. இன்னும் மோசமாக நமது ராணுவ வீரர்களை கொடூரமாகச் சித்திரவதை செய்து அங்கங்களைத் துண்டுதுண்டாக அறுத்து பெட்டியில் போட்டு அனுப்பிய போதும் கூட அமைதி காத்தார். மும்பைத் தாக்குதல்களில் 171 உயிர்கள் பறிபோன போதும் பொங்கி எழவில்லை. எவ்வளவு துாரம் அப்போது இந்தியா அசிங்கப்பட்டது தெரியுமா? -

ஆனால், மோடி தலைமையிலான புதிய இந்தியாவில் நடப்பது என்ன தெரியுமா?-

மோடி தலைமையிலான முதல் 8 வருட ஆட்சியில் 25 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமான பெரிய தாக்குதல் என்றால் அது புல்வாமாவில் 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டது தான். அடுத்து உரி மற்றும் பதான்கோட் தாக்குதல்கள்.-

ஆனால்..... மோடி தலைமையிலான புதிய இந்தியா என்ன செய்தது தெரியுமா? முதலில் உரி, மற்றும் பதான்கோட் தாக்குதல்களுக்குக் காரணமான தீவிரவாதிகள் 38 பேர் மற்றும் 2 பாகிஸ்தான் வீரர்களை எதிரியின் கோட்டையிலேயே அதாவது பாகிஸ்தான் எல்லையை ஊடுறுவி "சர்ஜிகல் ஸ்டிரைக்" நடத்திக்கொன்றது.

அதுமட்டுமல்ல, புல்வாமா தாக்குதல் நடத்திய, திட்டமிட்ட கொலையாளிகளையெல்லாம் ஒன்றரை வருடங்கள் விடாமல் வேட்டையாடிக் கொன்றது. சம்பவம் நடந்த அடுத்த மாதமே பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் சர்ஜிகல் தாக்குதல் நடத்தி 350 தீவிரவாதிகளை கொன்றது.

அதுமட்டுமல்ல, ஜெய்ஸ்- இ - முகமது இயக்கத் தலைவனும் கந்தகார் விமானக் கடத்தலில் விடுவிக்கப்பட்டவனும், மும்பைத்தாக்குதல் முதல் புல்வாமா தாக்குதல் வரை நிகழ்த்தியவனுமான மசூத் அசார் இந்தத் தாக்குதலில் உயிரிழந்திருக்க 100% வாய்ப்புள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதைத் தொடர்ந்து மறுத்து வந்தாலும் பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு அவன் வெளிவரவேயில்லை என்பது தான் உண்மை.

அடுத்ததாக, மிக முக்கியமான நிகழ்வு, தனது குருநாதரும் பிதாமகருமான வாஜ்பாயின் நெஞ்சில் குத்தியமுள்ளான கந்தகார் விமானக் கடத்தல் குற்றவாளிகளான 5 நபர்களை மோடி அரசாங்கம் வேட்டையாடிக் கொன்றுள்ளது. அதில் மிக முக்கியமான இந்தியப் பயணியின் கழுத்தை அறுத்துக்கொன்றவனும் மசூத் அசாரின் உறவினர் "லம்பு" என்ற முகமது இஸ்மல் அல்வியை கடந்த 01.02.2022-ல் கராச்சியில் வைத்து சுட்டுக்கொன்றுள்ளது நமது மோடி அரசு.

காங்கிரஸ் அரசாங்கத்திற்கும் மோடி அரசாங்கத்திற்குமான முக்கியமான வேறுபாடு என்ன தெரியுமா?-

காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளையெல்லாம் கைது செய்து சிறைகளில் பிரியாணி சப்ளை செய்து வந்தது. ஆனால், மோடி தலைமையிலான அரசு கொடூரமான தீவிரவாதிகளையெல்லாம் கைது செய்கிறேன் பேர்வழி என்று போக்குக் காட்டாமல் உடனுக்குடன் என்கவுண்ட்டர் செய்து வருகிறது.

இப்பொழுதெல்லாம் தீவிரவாதிகள் தீபாவளி பட்டாசைப் பார்த்தால்கூட அலறுவதற்கான காரணம் இப்பொழுது புரிகிறதா? ஜெய் மோடி சர்க்கார்.

நன்றி: தேசப்பற்றாளர் ந.முத்துராமலிங்கம் பதிவு.

Tags:    

Similar News